Fish

Thursday, November 10, 2011

ஐஸ்வர்யா ராய்க்கு நாளை பிரசவம்


நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு நாளை பிரசவம் நடக்கிறது. நடிகை ஐஸ்வர்யா ராய் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்த ஆண்டின் விசேஷ தினமாக கருதப்படும் நாளை (11-11-11) அவருக்கு பிரசவம் நடக்கிறது. இதற்காக மும்பையில் உள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருடன் கணவர் அபிஷேக், அமிதாப் பச்சன், மாமியார் ஜெயாபச்சனும் தங்கியுள்ளனர்.

இவர்களுக்காக மருத்துவமனையின் 5வது மாடியில் விசேஷ அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அமிதாப் குடும்பத்தினர் இங்கு தங்கியிருக்கும் வரை மருத்துவமனைக்கு பாதுகாப்பை அதிகரிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மருத்துவமனை பாதுகாவலர்கள் 6 மணி நேரத்துக்கு பதிலாக 12 மணி நேரம் பணியாற்றும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. தவிர, தனியார் பாதுகாப்பு நிறுவன செக்யூரிட்டிகளும், போலீசாரும் மருத்துவமனை வளாகத்தில் குவிக்கப்பட்டு உள்ளனர். ஐஸ்வர்யா ராய், அவருடைய குடும்பத்தினரையோ யாரும் படம் எடுத்துவிடக் கூடாது என்பதற்காக, அவர்கள் தங்கியிருக்கும் அறைக்குள் செல்போன் எடுத்துச் செல்ல மருத்துவமனை நிர்வாகம் தடை விதித்துள்ளது.

Wednesday, November 9, 2011

தீவிரவாதிகளின் தாக்குதல் பட்டியலில் சச்சின் உள்பட 18 வி.ஐ.பி.க்கள்: ஐபி எச்சரிக்கை


Sachin Tendulkar
Ads by Google
Get Ready to be Recruited 
Apply for Graduate Assessment Test. Last date to apply is 19 Nov! www.niitcareersatcampus.com
மும்பை: தீவிரவாதிகளின் ஹிட் லிஸ்டில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 18 வி.ஐ.பி.க்கள் பெயர் உள்ளது என்று புலனாய்வுத் துறை எச்சரித்துள்ளது.

மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரபிரதேச மாநிலங்களைச் சேர்ந்த போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் ஒன்று நடந்தது. இதில் கலந்து கொண்ட புலனாய்வுத் துறை அதிகாரிகள் லஷ்‌கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற தீவிரவாத அமைப்புகளால் வி.ஐ.பி.களுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று எச்சரித்தனர்.

தீவிரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்த தயாரித்துள்ள பட்டியலில் 18 வி.ஐ.பிக்களின் பெயர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. போலீசாரோ, புலனாய்வுத் துறை அதிகாரிகளோ அந்த தாக்குதல் பட்டியலில் உள்ளவர்களின் பெயர்களை வெளியிட மறுத்துவிட்டனர்.

பாஜக மூத்த தலைவர் அத்வானி, பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், சல்மான் கான், ஷாருக் கான், ஆமிர் கான், கிரிக்கெட் வீரர் சச்சின், மும்பையின் மிகப் பெரிய தொழில் அதிபர்கள் 2 பேர், பூனே தொழில் அதிபர்கள் 3 பேர் இந்த பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் பட்டியலில் உள்ள வி.ஐ.பி.க்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்ப அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது ரத யாத்திரை மேற்கொண்டுள்ள பாஜக தலைவர் அத்வானிக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பை பலப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நமீதா - சேரன் மோதல்!


ரசிகர்களை மச்சான்ஸ் என்று அழைத்து, மேடையில் நின்றபடி பறக்கும் முத்தம் கொடுத்தார் நடிகை நமீதா. இதனால் கடுப்பான இயக்குநர் சேரன், நமீதாவுக்கு கண்டனம் தெரிவித்தார்.

வெளி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நமீதா, கூடியிருக்கும் ரசிகர்களைக் குஷிப்படுத்தும் விதத்தில் மச்சான்ஸ் என்று விளிப்பது வழக்கம். சில நேரங்களில் தனது அன்பைக் காட்ட அவர் ப்ளையிங் கிஸ் கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்துவார்.

இரு தினங்களுக்கு முன் அம்புலி என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை காமராஜர் அரங்கில் நடந்தது. கலைப்புலி தாணு, கேயார், பார்த்திபன் என முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்ற இந்த விழாவில், நமீதா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். சேரனும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.

பாடல் வெளியீடு முடிந்ததும் வாழ்த்திப் பேச வந்த நமீதா, ஹாய் மச்சான்ஸ் என தனது வழக்கமான ஸ்டைலில் பேச்சை ஆரம்பித்தார். பேசி முடித்த பிறகு, ரசிகர்களை நோக்கி முத்தம் ஒன்றைப் பறக்கவிட்டார். உடனே கூட்டத்தில் பயங்கர விசில் மற்றும் கைத்தட்டல்.

பேசி முடித்த உடனே நமீதா அரங்கிலிருந்து கிளம்பிவிட்டார். அடுத்துப் பேச வந்த இயக்குநர் சேரன், "என்ன இந்தப் பொண்ணு இப்படி பேசிட்டுப் போகுது... ரசிகர்களை மச்சான்கள் என்கிறார். அதை கேட்டு எல்லோரும் கை தட்டி விசில் அடிக்கிறீர்கள். பொதுமேடையில் அவர் இது போல் பேசி இருக்கிறார். இது சரிதானா? நம்ம வீட்டு பொண்ணுங்க இதுபோல் மேடையில் நின்னு கிஸ் கொடுத்தாலோ மச்சான்கள் என்றாலோ ரசிப்போமா... மக்கள் மனசு மாறிப் போச்சு," என்றார் கடுப்புடன்.

அப்படி என்ன தப்பா பேசிட்டேன்?

இது குறித்து நமீதாவிடம் கேட்டபோது, "நான் அப்படியொன்றும் தவறாகப் பேசிவிடவில்லையே. எப்போதும் போல மச்சான்ஸ் என்று தானே அழைத்தேன். ஒவ்வொரு பிரபலமும் மக்களை ஒவ்வொரு விதமாக அழைப்பதில்லையா... ரசிகர்கள் மீது நான் வைத்துள்ள அன்பைக் காட்டவே அப்படி அழைக்கிறேன். இது பல வருடங்களாக நான் செய்து வருவது தான். இதை சேரன் புரிந்து கொள்ளட்டும். எதற்கெடுத்தாலும் குறை சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது!," என்றார்.

தமிழ் தெரியாத நடிகைகள், செலவு வைக்கும் இசையமைப்பாளர்கள் - சேரன் தாக்கு


இப்போதெல்லாம் மொழி தெரியாமல் இங்கு நடிக்க வரும் நடிகைகளை தமிழை கடைசி வரை கற்றுக் கொள்வதே இல்லை என்றும், வெளிநாட்டுக்கு கம்போசிங் போகிறோம் என்ற பெயரில் இசையமைப்பாளர்கள் தயாரிப்பாளர்களுக்கு செலவு வைப்பதாகவும் சாடினார் இயக்குநர் சேரன்.

தெலுங்கில் பூமிகா தயாரித்த படத்தை 'துள்ளி எழுந்தது காதல்' என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்கின்றனர். இதன் பாடல் சி.டி. வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படத்துக்கு தேவா குடும்ப வாரிசான போபோ சசி இசையமைத்திருந்தார். எனவே தேவா மற்றும் அவரது சகோதரர்கள் சபேஷ் முரளி உள்பட குடும்பத்தினர் வந்திருந்தனர்.

இதில் பங்கேற்ற சேரன் பேசுகையில், "தமிழ் படங்களில் இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாள நடிகைகள் பலர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். அனுஷ்கா, ஹன்சிகா மோட்வானி, டாப்சி போன்றறோர் முன்னணி நடிகைகளாக உள்ளனர். மேலும் பல புதுமுக நடிகைகளும் நடிக்கின்றனர். இவர்களுக்கு தமிழ் தெரியாது. இந்த நடிகைகள் தமிழ் கற்க வேண்டும். துள்ளி எழுந்தது காதல் படத்தின் நாயகி ஹரிப்பிரியா இங்கு பேசும்போது, 'அடுத்த முறை விழாவுக்கு வரும் போது நிச்சயம் தமிழ் பேசு வேன்' என்றார். இதே மாதிரிதான் 'முரண்' பட விழாவிலும் சொன்னார்.

ஆனால் தமிழ் கற்றுக்கொள்ளவே இல்லை. வெளிமாநிலங்களில் இருந்து வரும் நடிகைகள் பலர் இப்படித்தான் சொல்கிறார்கள். ஆனால் தமிழ் கற்றுக் கொள்வது இல்லை. தமிழ்நாட்டு மருமகள் ஆகி விட்ட பிறகு தமிழ் கற்கிறார்கள். இனி வெளி மாநில நடிகைகள் ஆசிரியரை வைத்து தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும்.

இசையமைப்பாளர்கள் இப்போதெல்லாம் வெளி நாட்டுக்கு பாடல்கள் கம்போசிங் போவதையும் ஒரு மாதம் ரீ ரீக்கார்டிங் செய்வதையும் பெருமையாக பேசுகின்றனர். இதில் என்ன பெருமை இருக்கிறது... தயாரிப்பாளர்களுக்கு அப்படி செலவு வைக்கக் கூடாது! என்னுடைய பாரதி கண்ணம்மா தொடங்கி பல படங்களில் பின்னணி இசைக்கு அதிகபட்சம் 7 நாட்கள்தான்," என்றார்.

பேஸ்புக்: தனுஷ் பெயரில் மோசடி!
பேஸ்புக்கில் தனது பெயரை பயன்படுத்தி யாரோ ஒருவர், ரசிகர்களை ஏமாற்றி வருவதாக தனுஷ் புகார் கூறியுள்ளார்.

பேஸ்புக்கில் தனுஷ் போல தோற்றமுடைய ஒருவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

'நான் தனுஷ், என்னிடம் நீங்கள் உரையாடலாம்..' என்றும் அந்த புகைப்படத்தில் உள்ள நபர் கூறியுள்ளதை நம்பி இதுவரை 4000-க்கும் அதிகமான ரசிகர்கள் அவரிடம் உரையாடியுள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்த தனுஷ், அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி தனுஷ் கூறுகையில், "தனுஷ் கஸ்தூரிராஜா என்ற பெயரில் அந்த நபர் பேஸ்புக்கில் பெயர் ஒற்றுமையை வைத்து மோசடி செய்திருக்கிறார்.

அந்தப் படத்தில் இருப்பது நான் அல்ல. ஆனால் 4 ஆயிரம் ரசிகர்கள் வரை அவரை நான்தான் என நம்பி ஏமாந்துள்ளனர். இதுபற்றி அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தேன். அந்த மோசடி நபரை கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. அதேநேரம் நான் என நம்பி அவரிடம் பேசவேண்டாம் என ரசிகர்களை கேட்டுக்கொள்கிறேன். விரைவில் இதுபற்றி சைபர் கிரைம் போலீசார் மூலம் நடவடிக்கை எடுப்பேன்," என்றார்.

ராகுல் காந்தி பெயரில் போலி பேஸ்புக் கணக்கு புழங்குவதாக புகார்- ம.பி. போலீஸ் விசாரணை

போபால்: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி பெயரில் போலியான பேஸ்புக் கணக்கு புழக்கத்தில் இருப்பதாக கூறி வந்த புகாரைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில்தான் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் செளகான் பெயரில் போலியான பேஸ்புக் கணக்கு இருப்பதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் ராகுல் பெயரிலும் ஒரு போலியான பேஸ்புக் கணக்கு இருப்பதாக ம.பி. போலீஸாருக்குப் புகார் வந்துள்ளது.

இதுகுறித்து மாநில சைபர் குற்றப் பிரிவு போலீஸாருக்குப் புகார்கள் வந்தன. போபால் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பங்கஜ் சதுர்வேதியும் ஒரு புகார் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். எந்த கம்ப்யூட்டரிலிருந்து இந்த பேஸ் புக் கணக்கு இயக்கப்படுகிறது என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த விவரத்தை சேகரித்த பின்னர் கலிபோர்னியாவில் உள்ள பேஸ்புக் தலைமையகத்திற்கு விவரங்களை அனுப்பி அந்தக் கணக்கை முடக்க கோரிக்கை விடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'சூர்யா பட வசனத்தை நீக்கிய இலங்கையில் இனி தமிழ்ப் படங்களை வெளியிடக் கூடாது!'


சென்னை: சூர்யாவின் 7 ஆம் அறிவு படத்தில் தமிழர்களின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் இடம்பெற்ற வசனங்களை நீக்கிய இலங்கையைக் கண்டிக்கும் வகையில் இனி அங்கு தமிழ் திரைப்படங்களே திரையிடக்கூடாது என போராட்டம் வெடித்துள்ளது.

ஈழத் தமிழர்கள் மீது பல நாடுகள் இணைந்து தாக்குதல் நடத்தியதாலேயே தமிழரக் விடுதலைப் போராட்டம் வீழ்ச்சியை அடைந்ததாக ஏழாம் அறிவு படத்தில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. இவற்றையெல்லாம் நீக்கி விட்டு இலங்கையில் திரையிட்டுள்ளனர்.

இதற்கு தமிழ் பட உலகில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இனிமேல் இலங்கையில் எனது படங்களை திரையிடமாட்டேன் என்று இயக்குநர் சசிகுமார் அறிவித்துள்ளார்.

7ஆம் அறிவு தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுபோல் எல்லா தயாரிப்பாளர்களும் இலங்கையில் தமிழ் படங்கள் திரையிடுவதை தவிர்க்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி வற்புறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "இலங்கையில் தமிழ் படங்களை திரையிட அனுப்ப மாட்டோம் என்று உதயநிதி ஸ்டாலின், சசிகுமார் ஆகியோர் அறிவித்து இருப்பதை வரவேற்கிறோம்.

உலகம் முழுவதும் இலங்கை தமிழர்கள்தான் தமிழ் படங்களை பார்க்கின்றனர். இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களை உலகமே கண்டித்து வருகிறது. அந்த நாட்டுக்கு நடிகர்- நடிகைகள் செல்லக் கூடாது என்று ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. அது போல் தமிழ் படங்களையும் அனுப்புவதில்லை என்று தயாரிப்பாளர்கள் முடிவு செய்ய வேண்டும்," என்று கூறப்பட்டுள்ளது.